Saturday, January 12, 2008

திருவடிகள் தொழுகின்றேன்

அலைபாயும் மனதினோடே
அமைதியில்லா இதயத்தினோடே
கவலை எனும் கடலின் இடையே
துடுப்பின்றி மிதக்கின்றேனே

குறைகள் இன்றி மனிதர் உண்டோ?
குழப்பம் இன்றி வாழ்க்கை உண்டோ?
உம்மையன்றி எனக்கொரு கதியுமுண்டோ?
எண்ணிப்பார்த்து சாந்தம் அடைந்தேனே

உலகத்தின் ஒரு முனையில்
உறக்கமின்றி தவிக்கும் நிலையில்
உன் நினைவு வந்த பொழுதில்
மனம் மலர்ந்து மகிழ்ச்சி கொண்டேனே

கருணை என்னும் விளக்கெரிய
கொண்ட கவலை விலக்கினாயே
நின் நினைவின்றி இருந்த என்னை
பெருமானே, நொடிப்பொழுதில் ஆட்கொண்டாயே

Labels: , ,

0 Comments:

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home